Wednesday, November 09, 2011

முகப்பரு


இலைகளை ஏமாற்றாதே..!

அன்பே..
அந்தி நேரங்களில்
அடிக்கடி வெளியே வராதே
கதிரவனைக் கண்டதாய்
இலைகள் ஓளிச்சேர்க்கைக்கு
ஆயத்தம் ஆகிவிடுகின்றன.!

அகராதியில் நீ..

அடித்துச் சொல்கிறேன்
அகராதியின்
அடுத்த பதிப்பில்
அழகுக்கு பொருள்
அன்பே
உன் பெயரென
பதிப்பிக்கப்படும்.!

Tuesday, November 08, 2011

கணனி விடு தூது

இனியவளே..
காதலுக்கு அழகு
கணனி விடு தூதேயாகினும்
இனி மின்னஞ்சல் வழி
என்னஞ்சல் சேராதே..!
அது உன்
வாஞ்சையை
வடித்துவிட்டு
வார்த்தைகளை மட்டுமே
வரிக்கிறது.!

பூவும் பூவையும்

நாணம் ஒன்றே
உன்னையும்
பூக்களையும்
வேறுபடுத்தும் காரணி.!

பெயர்ப்பிழை..

தேன்மொழி என்றும்
வேல்விழி என்றும்
பெயரிடுவர்
கண்ணே ..
உன் விழி காணாதோர்
உன் மொழி கேளாதோர்..!

Monday, November 07, 2011

இரட்சகன்.!!

உலக இரட்சகனுக்கு உற்சவம்
காவல் துறையின்
கவசப் பாதுகாப்போடு.!

This page is powered by Blogger. Isn't yours?