Thursday, June 23, 2005
எப்போதோ புலம்பியது..
90களின் கடைசியில் நான் புலம்பியவைகளிலிருந்து சில..
மூவிரண்டு வருடங்களாய்
முயற்சித்து பார்க்கிறேன்
காலையும் மாலையும்
காத்திருந்து கலைகிறேன்
கற்பனையில் உருவான்
கண்மனிய காணலையே.!
என் வயசு பசங்களெல்லாம்
எப்படியோ தானிருக்க
நான் மட்டும் soloவாய்
இன்னும் எத்தனை நாள்
காத்திருக்க...
நீ வர தட்சணையாய்
சேமிப்பு கணக்கில்
சேர்த்தது ஏராளம்
இத்தனையும் இருப்பில் கொண்டு
இன்னும் எத்தனை நாள்
காத்திருக்க...
சந்தர்ப்பங்களால் உந்தப்பட்டு
கொள்கைகளில் கொஞ்சம்
பிறழியிருக்கிறேன்
ஆனால் ஒன்றில் மட்டும்
உறுதியாயிருக்கிறேன் - அதை
உனக்கு மட்டுமே
ஒதுக்கியிருக்கிறேன்
இவையெல்லாம் பின்பற்றி
இன்னும் எத்தனை நாள்
காத்திருக்க...
sockets முதல் சாம்பார் வரை
அத்தனையும் அத்துபடி
இத்தனையும் அறிந்து வைத்து
இன்னும் எத்தனை நாள்
காத்திருக்க...
இளநிலையோ இழுக்காகும்
என்றெண்ணி உனக்காக
முதுநிலையும் முடித்து வைத்தேன்
இவையெல்லாம் பயின்று வைத்து
இன்னும் எத்தனை நாள்
காத்திருக்க...
எங்கிருந்தோ எனை இயக்கும்
இளையவளே என் இனியவளே
முகம் காட்ட மறுக்கும் தேவதையே
என்று வருவாய்
என் ஏக்கம் தீர்க்க.?
மணமானால் மாறிவிடுவேனாம்
அதற்காகவேனும்
மங்கை நீ வந்தால் மாட்சி பெறுவேனாம்
இதற்காகவேனும்
இன்றே வருவாயா
இயம்புக சகியே..!
--------- தவிப்புடன் நான்..
மூவிரண்டு வருடங்களாய்
முயற்சித்து பார்க்கிறேன்
காலையும் மாலையும்
காத்திருந்து கலைகிறேன்
கற்பனையில் உருவான்
கண்மனிய காணலையே.!
என் வயசு பசங்களெல்லாம்
எப்படியோ தானிருக்க
நான் மட்டும் soloவாய்
இன்னும் எத்தனை நாள்
காத்திருக்க...
நீ வர தட்சணையாய்
சேமிப்பு கணக்கில்
சேர்த்தது ஏராளம்
இத்தனையும் இருப்பில் கொண்டு
இன்னும் எத்தனை நாள்
காத்திருக்க...
சந்தர்ப்பங்களால் உந்தப்பட்டு
கொள்கைகளில் கொஞ்சம்
பிறழியிருக்கிறேன்
ஆனால் ஒன்றில் மட்டும்
உறுதியாயிருக்கிறேன் - அதை
உனக்கு மட்டுமே
ஒதுக்கியிருக்கிறேன்
இவையெல்லாம் பின்பற்றி
இன்னும் எத்தனை நாள்
காத்திருக்க...
sockets முதல் சாம்பார் வரை
அத்தனையும் அத்துபடி
இத்தனையும் அறிந்து வைத்து
இன்னும் எத்தனை நாள்
காத்திருக்க...
இளநிலையோ இழுக்காகும்
என்றெண்ணி உனக்காக
முதுநிலையும் முடித்து வைத்தேன்
இவையெல்லாம் பயின்று வைத்து
இன்னும் எத்தனை நாள்
காத்திருக்க...
எங்கிருந்தோ எனை இயக்கும்
இளையவளே என் இனியவளே
முகம் காட்ட மறுக்கும் தேவதையே
என்று வருவாய்
என் ஏக்கம் தீர்க்க.?
மணமானால் மாறிவிடுவேனாம்
அதற்காகவேனும்
மங்கை நீ வந்தால் மாட்சி பெறுவேனாம்
இதற்காகவேனும்
இன்றே வருவாயா
இயம்புக சகியே..!
--------- தவிப்புடன் நான்..