Friday, May 08, 2015

யார் நீ!




யார் நீ - கேட்கிறாள்
விழிகளால் 
மேயும் வித்தை 
கற்ற தத்தை
உன் வளைவுகளில்
வழுக்கியவன்
விழி மேய்ச்சலில்
வீழ்ந்தவனடி

நர்த்தனம்




பரதம் பயிலும்..
பாவையின் 
கால்கள் தரையில் 
பார்வையாளன் விழிகள்
அவளது மேனியில்

Tuesday, April 28, 2015

கண்களால் களவு செய்

கண்களால் களவு செய்!


உனைக் கண்டேன்
எனைக்கொண்டாய் 
இதயம் நழுவி 
இடம் மாற 
கண்களால் களவு செய்தாய்
ஆத்தீ - நீ
காதல் கடத்தி!

Monday, January 19, 2015

செடியில்  பூக்கள் -  சருகாகும்
உன் குழலேறும் பூக்கள் - மெருகேரும்
பூக்கள் மரிப்பது
உன் கூந்தலிருந்து
உதிரும் போதுதான்.!

Saturday, May 03, 2014

மைய நோக்கு விசை



மைய நோக்கு விசையை
தவறாய் புரிந்துகொண்ட
தறுதலையோ .?
ஏன் பார்வை
அங்கேயே நிலைகொத்தி நிற்கிறது.?

விழியின் பாடம் விளங்கவில்லை.!




உன் விழிகள்
பேசும் மொழிகள் அறிய
அகராதியைத்
தேடிக்கொண்டிருக்கிறேன் இன்னும்.!

நான் அவனில்லை.!


நான் ராமனில்லை..
நான் ராமனில்லை..
கட்டியவள் களங்கமுற்றாளோ
என அய்யம் கொண்டு அறிவிழக்க
நான் ராமனில்லை..
நான் ராமனில்லை..

Wednesday, November 13, 2013

சுயம்வரம்


உன் கூந்தல் சேர
என் வீட்டு
ரோஜாக்களின் சுயம்வரம்

மௌனித்தன.!

உன் பாதங்களை
ரசித்த தருணங்களில்
உன் கொலுசுகள்
மௌனித்தன.!

Tuesday, November 12, 2013

நாணம்



உன் நாணத்தால்
இருள்கூட ஒளிருதடி.!


பாத ஸ்பரிசம்




என் கன்னங்கள்
மென்மையென களித்திருந்தேன்
கண்ணே உன்
பாதங்களின் ஸ்பரிசம்
பரிச்சியம் ஆகும் வரை.!

Tuesday, October 16, 2012

வருகைப்பதிவேடு



அப்படியா.?



This page is powered by Blogger. Isn't yours?