Saturday, June 18, 2005

எங்கே என் தமிழ் பற்று?

நான் எப்போதும் என் தமிழ் பற்று மீது அதிக மதிப்பீடு கொண்டவன்.. என்னைப்போல் தமிழ் ஆர்வலர் எவருமில்லை என்று நினைப்பதுண்டு .
என் பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழ் வழி படித்தவன். அந்த நாட்களில் நிறைய தமிழ் நூல்கள் படிப்பதுண்டு, பட்டிமன்றங்களில் பங்கேற்பதுண்டு, எங்கள் குடும்பமும் திராவிட இயக்க கொள்கைகளில் ஈடுபாடு கொண்டது.   எனவே எனக்குள் தமிழார்வம் உள்ளதில் ஆச்சர்யம் இல்லை


விஷயத்திற்கு வருவோம். நானும் ஒரு நாடோடி.. அமெரிக்காவில் குடியேறும் முன் பல நாடுகளில் வேலை பார்த்தேன். குறிப்பாக அய்ரோப்பாவில் பணியில் இருந்த போது சுட்கர்ட்(Stuttgart) நகரில் தங்கியிருந்தேன், அப்போது (1997ல் ) பல ஈழ தமிழ் சகோதரர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது, அவர்களுடன் பழகிய பிறகுதான்  என் தமிழார்வமும் உணர்வும் எள்ளி நகையாடுமளவே என தெளிந்தேன்.

தமிழ் நாட்டிலிருந்து வரும் தமிழன் என்றாலே அவர்கள் அளிக்கும் மரியாதை, அன்பு அனைத்துமே மெய் சிலிர்க்க வைக்கும்.  அங்கு அரிசி கிடைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல, கடைக்கு வந்த உடனேயே தீர்ந்துவிடும். எங்கள் குழுவில் நான் மட்டுமே தமிழன். கடை வைத்திருப்பது ஒரு ஈழ சகோதரர், அவர் எனக்கென்றே எடுத்து வைத்திருப்பார்.

லுக்சம்பர்க்கில்(Luxemburg) இருக்கும் போதும் அப்படிதான், மெக்டொனல்சில் லன்ச் சாப்பிடும் போது ஒரு ஈழ சகோதரி சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக எனக்காக காத்திருந்து பேசிவிட்டு சென்றார். ஆச்சர்யம் என்னவென்றால் எனக்கு அவரை முன்பின் தெரியாது, தமிழ்நாட்டிலிருந்து வந்தவன் என்ற ஒரே காரணத்தால் தன் உறவினர் போல் என்னை பாவித்தார்.

இன்றும் எண்ணிப்பார்க்கிறேன் ஏன் மற்ற பகுதியிலிருந்து வரும் தமிழர்களால் அவர்களைப் போல உணர்வு பூர்வமாக இருக்கமுடிவதில்லையென்று? அல்லது அவர்களை போல் ஒருவரை நான் சந்திக்கவில்லையா???..

Comments:
வாங்க வாங்க!

-மதி
 
dear ,i couldnot find any current article today. in europe are still schwdt,berlin, rostok are existing? in the sense improved ?any idea.i worked at schwedt for two years in petrochemical.
(tamil still learning)
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?